Pro Kabbadi
தமிழ் தலைவாஸ் - எப்படிச் சாத்தியமானது?
Pro Kabbadi: தொடர் வெற்றிகள்; விஸ்வரூபம் எடுக்கும் தமிழ் தலைவாஸ் – எப்படிச் சாத்தியமானது?
தமிழ் தலைவாஸின் இந்த சீசன் செயல்பாடுகளை பயிற்சியாளர் அசன் குமார்
வருகைக்கு முன் வருகைக்கு பின் என வகைப்படுத்தலாம். ஏனென்றால் அவர் வந்த பிறகுதான்
தமிழ் தலைவாஸ் சிறப்பான அதிரடியான ஆட்டங்களைக் களத்தில் வெளிப்படுத்தி வருகின்றது.
புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது 11வது போட்டியை நேற்று முன்தினம் ஆடி முடித்திருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வென்று அசத்திருக்கிறது தமிழ் தலைவாஸ். இந்தப் போட்டியில் 35 – 34 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதன் முறையாக 3-வது இடத்தை பிடித்திருக்கிறது தமிழ் தலைவாஸ். கடந்த ஐந்து போட்டிகளாக ஒரு தோல்விகள் கூட இல்லாமல்
வெற்றி முகமாகவே இருக்கின்றனர்.
மிழ் தலைவாஸ் அணியின் தொடர் வெற்றிகள் பற்றியும் பயிற்சியாளர் அசன் குமார் பற்றியும்
ஓர் விரிவான அலசல் இங்கே…
பவன் காயமும் தமிழ் தலைவாஸ் தொடர் தோல்விகளும்:
பவன் குமாரை இரண்டு கோடிக்கும் அதிகமாகக் கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் வாங்கி இருந்தது.
இந்த சீசனில் பவனை நம்பி மட்டும்தான் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. தமிழ் தலைவாஸ் ரசிகர்களுமே பவனின்
வருகையால் உற்சாகமடைந்தனர்.
காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
இந்த சீசனில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டார் பவன் குமார்.
பவன் குமார் இல்லாததால் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது.
ரெய்டர்கள் நன்றாக ஆடினால் டிஃபன்டர்கள் சொதப்புவார்கள். டிஃபன்டர்கள் நன்றாக ஆடினால்
ரெய்டர்கள் சொதப்புவார்கள். தமிழ் தலைவாஸிடம் ஒரு அணியாக ஒருங்கிணைந்த பெர்ஃபார்மன்ஸ்
வெளிப்படவே
பயிற்சியாளர் உதயகுமார்
கடந்த சீசன் மற்றும் இந்த சீசனின் சில போட்டிகள் வரை பயிற்சியாளர் உதயகுமாரோடு
தமிழ் தலைவாஸ். ஒரு வெற்றிக்கான தேடல் அவரிடம் காணப்படவில்லை. டிஃபன்சிவ்வான அணுகுமுறையே அவரிடம்
அதிகம் காணப்பட்டது. ஸ்டார்டிங் 7-ல் இரண்டே இரண்டு ரெயடர்களோடும் ஐந்து டிஃபென்டர்களோடுதான்
தமிழ் தலைவாஸ் களமிறங்கியது.