உலகில் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடு
The country has the best education system in the world
உலகில் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடுகள் பல இருப்பினும் வருடாந்தம் உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 2018 ம் ஆண்டின் அறிக்கையின் படி:
உலகில் கல்வியில் முதலிடம் பிடித்த நாடு ஜப்பான் ஆகும். பின்லாந்து காணப்படினும் அங்கு சிறந்த கல்வி முறை காணப்படுகின்றது.
இரண்டாவது இடத்தில் தென்கொரியா காணப்படுகின்றது.
மூன்றாவது இடத்தில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் காணப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் சீனா காணப்படுகின்றது. அதாவது சீனாவின் ஹொங்கொங் பிரதேசம் காணப்படுகின்றது.இங்குள்ள மாணவர்கள் திறமையானவராகக்க காணப்படுகின்றார்கள்.
ஐந்தாவது இடத்தில் உலகின் சிறந்த கல்வி முறையைக் கொண்டிருக்கும் பின்லாந்து காணப்படுகின்றது.இங்கு உலகின் சிறந்த கல்வி முறை காணப்படுகின்றது.
ஆறாவது இடத்தில் ஐரோப்பாவின் முக்கிய நாடான ஐக்கிய இராச்சியம் (UK) காணப்படுகின்றது. இது ஐரோப்பாவில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் கல்லூரி மற்றும் கேம்பிரிஜ் கல்லூரியையும் கொண்டுள்ளது.
பின்லாந்து நாட்டின் கல்வி முறையே சாலச் சிறந்ததாகும்.
எளிய முறையில், பார மற்ற, அத்தியாவசிய அடிப்படைக் கல்வியை தருவதால்!
5 வயது வரை பெற்றோர் அரவணைப்பில் உண்டு (போஷாக்கு உணவு)
உறங்கி ( நிம்மதியாக)
உடலில் எதிர்ப்பு சக்தி நிறைந்து,
உல்லாசமாக துள்ளித் திரிந்து, ( விளையாடி)
உறவுகளையும் நட்பையும் தெரிந்து கொண்டு,
பேசி , பழகி, உரையாடி, தனது உணவை தானே எடுத்து உண்ணத் தெரிந்து கொண்டு, 6 ம் வயதில்தான் பள்ளிப் படிப்பு துவங்கும்.
தியரியை போலவே பிராக்டிகலுக்கும் சம பங்கு முக்கியத்துவம்.
தேர்வு பயம் கிடையாது.
குழந்தைகளின் ஆர்வத்துக்கும் திறமைக்கும் மதிப்பளிக்கும் தன்மை.
உடல் நலத்தைப் போலவே மனநலத்துக்கும் முக்கியத்துவம்.
படிப்படியாக மாணவர் முன்னேற்றத்தை ஊக்குவித்து, அவரவருக்கு ஏற்ற கல்வி திட்டத்தை பரிந்துரைக்கும் ஆசிரியர்கள்.
ஆண்டு தோறும் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு வகுப்பிலும் குறைவான அளவில் மாணவர் சேர்க்கை.
மகிழ்ச்சியாக பள்ளி செல்லும் மாணவர்களை பார்ப்பதே ஒரு பரவசம்.
மிக் குறைவான பள்ளி நேரம், பள்ளி நாட்கள், குறைவான ஆன்லைன் வீட்டுப் பாடம்.
தேவையான போது பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு,
அந்த நாட்டிற்கு கல்வி சுற்றுலா மூலம் பெரிய அளவில் ஆண்டுதோறும் அந்நிய செலவாணி கிடைக்கிறது. போதுமான நினைக்கிறேன்.