கமலிடம் படம் போட்டுக்காட்டிய ரஜினி.. ஆண்டவர் கொடுத்த அட்வைஸை எடுத்துக்கொண்ட தலைவர்…!
Rajini and Kamal Friendship
Rajini and Kamal : ரஜினியின் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படையப்பா. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை செய்தது. குறிப்பாக இப்படத்தை ரஜினியே நடித்து தயாரித்து வெளியிட்டார்.கமலிடம் படம் போட்டுக்காட்டிய ரஜினி..ஆண்டவர் கொடுத்த அட்வைஸை எடுத்துக்கொண்ட தலைவர்…!
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் மற்றும் உலகநாயகன் இருவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். என்னதான் இவர்கள் போட்டி நடிகர்கள் என ரசிகர்களால் சொல்லப்பட்டாலும் இவர்கள் இவ்வரும் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கின்றனர். ஒரு மேடையில் தென்னிந்தியா நடிகர்கள் அனைவரும் அமர்ந்திருக்க கமல் பேசுகையில், எங்களை போல ஒரு நண்பர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது என பேசினார்.
Read Also : Cinema News
இவர் பேசியதை கேட்டு அரங்கமே அதிர்ந்தது. அந்த அளவிற்கு இவர்களின் நட்பு இருந்து வருகின்றது. கடந்தாண்டு கூட பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பேசினார்கள். இந்நிலையில் ரஜினி அவ்வப்போது கமலிடம் தன் படத்தை போட்டுக்காட்டி எப்படி இருக்கு என கேட்பார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.