மனதை பயன்படுத்தாமல் எப்படி தியானிப்பது – How to Meditate without using the Mind
ஒரு ஜென் மாணவன் பல வருடங்களாக தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான்.
மனதை பயன்படுத்தாமல் எப்படி தியானிப்பது
How to Meditate without using the Mind
ஒரு ஜென் மாணவன் பல வருடங்களாக தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது இந்த அனுபவம் என்னை சிலிர்க்க வைத்தது எனக்கு தியானம் கைகூடி விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒருநாள் சீடன் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது குரு அவனை தேடி வந்தார் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் இங்கு நிறைய புத்தர் சிலைகள் இருக்கிறது. நீ அவரை போல் உட்கார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
புத்தரைப் போல் உட்கார்ந்து விட்டால் தியானம் கைகூடாது.
பாஷோ என்ற ஜென் கவிஞரின் ஹைக்கூ இதனை சொல்கிறது.
பழைய குளம்
தவளை உள்ளே குதிக்கிறது
அப்பா!…. அந்த சத்தம்!…..
அதுதான் அந்த சத்தம் ஒன்றே போதும் பல ஜென்மங்களாக தொடரும் தூக்கத்தை கலைக்க.
தியானம் முயற்சியால் வருவதில்லை. சிலர் தியானம் கைகூட வில்லை என்றால் இன்னும் அதிகமாக முயல்கிறார்கள். இது சுத்த அபத்தம். முயற்சி மனதில் எழுவது. மனம் செய்யும் செயல்தான் முயற்சி. அந்த முயற்சி எப்படி நம்மை மனம் தாண்டி அழைத்துச் செல்ல முடியும்.?
உங்கள் மனதையே சுற்றி சுற்றி வருவீர்கள்.
மனதை பயன்படுத்தாமல் எப்படி தியானிப்பது என்று கேட்கிறீர்கள்.
இது உங்கள் பிரச்சனை மட்டும் இல்லை. தியானம் செய்ய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் பிரச்சனை இது.
பலர் மனதை ஒருமுக்கப்படுத்துவதுதான் தியானம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருமுகப்படுத்துதல் என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒரு சமாச்சாரம்.
இதைத்தான் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சொல்லித்தருகிறார்கள். ஒருமுகப்படுத்துதல் என்பது அறுவை சிகிச்சை போன்ற சில நுட்பமான வேலைகளுக்கு அது அவசியம்.
ஆனால் தியானத்துக்கு அல்ல.
நீங்கள் கடவுளின் உருவத்தின் மேல், தீபத்தின் மேல், உள்ளே இருக்கும் ஒளியின் மேல், மனதில் இருக்கும் அன்பின் மேல், எதன் மேலும் உங்கள் கவனத்தை முனைப்பாக வைக்க தேவையில்லை. அப்படி வைத்தால் அதன் பெயர் தியானம் இல்லை.
ஒருமுகப்படுத்தப்பட்ட மனிதனின் கவனத்தை சிதறடிப்பது மிகவும் எளிது. வெளியில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு கூட அவனது கவனத்தை சிதறடித்து விடும்.
ஆனால் உண்மையான தியானத்தில் ஆழ்ந்து இருப்பவனை வெளி நிகழ்வுகள் எதுவுமே தொந்தரவு செய்யாது.
பறவைகள் பறக்கும் சத்தம் வாகனங்கள் உண்டாக்கும் சத்தம் என எல்லாவித சத்தங்களும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
உங்கள் உள் இருப்பில் ஒரு விழிப்புணர்வுடன் எதனுடனும் சம்பந்தப்படாமல் ஒரு சாட்சியாக கவனித்து இருத்தல் தியானம்.
இப்படியே தொடரும்போது ஒரு காலகட்டத்தில் உங்கள் முதுகெலும்பில் எறும்பு ஊர்வது போன்ற ஒரு உணர்ச்சி தெரிகிறது. உங்கள் குண்டலினி சக்தி மெதுவாக மேலே ஏறுவதை உணரமுடிகிறது. உள்ளே ஓர் ஒளி தெரிகிறது, மனதை மயக்கும் வண்ணங்கள் தெரிகிறது, பல அதிசயங்களை பார்க்கமுடிகிறது. என் கண்முன் இயேசுநாதர் தெரிகிறார், புத்தர் தெரிகிறார், கிருஷ்ணர் தெரிகிறார் என்று பினாத்த ஆரம்பிக்காதீர்கள்.
இது எல்லாம் மனம் ஏற்படுத்தும் தடைகள்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எதையும் மதிப்பீடு செய்யாமல் மேலும் மேலும் நிகழ்வுகளை விழிப்போடு கவனிப்பது மட்டும்தான்.
ஒரு நாள் உங்கள் மனம் பரிபூர்ண ஓய்வு நிலைக்கு போய் விடும். அந்த நிலையில்தான் நிர்மலமான விழிப்புணர்வு பொங்கும். அந்த விழிப்புணர்வில் எல்லா ஆசைகளும் எண்ணங்களும் மறைந்துவிடும். மனம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். மனமின்மை என்ற நிலைதான் தியான நிலை.
பரபரவென்று இயங்கும் தெருவில் அமர்ந்து கொண்டு அங்கே நிகழ்வதை கருத்து எதுவும் கூறாமல் எதையும் விமர்சிக்காமல் கவனியுங்கள். அதுவும் தியானம் தான்.
பிறகு அதை கண்ணை மூடி உள்ளே கொண்டு வாருங்கள் உங்கள் மனமும் ஒரு பரபரவென்று இயங்கும் ஒரு வீதியை போன்றதுதான்.
ரயில் வந்து போன பின்பு ஏற்படும் அமைதி மௌனம் கூட தியானம் தான். எல்லாவற்றையும் கவனித்தால் போதும் தியானம் கைகூடிவிடும். கவனியுங்கள்…. எந்தச் செயலிலும் ஈடுபடாதீர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் ஓய்வு கொள்கிறீர்கள்.
உங்களிடம் உள்ள இறுக்கங்கள் தளரும்.அப்போது ரோஜா மொட்டை போல உங்களிடம் உள்பார்வை விரியும்.
பின் அது மலர்ந்து மலராகும்.
அதிலிருந்து நறுமணம் வீசும்.
அந்த அமைதியில் தான் உண்மை குடிகொண்டிருக்கிறது.
அதில்தான் ஆனந்தம்இருக்கிறது.
அதில்தான் இறையருள் இருக்கிறது.
__ஓஷோ.
பஞ்சாங்கம் : (20-11-2023)
சோபகிருது_ஆண்டு : கார்த்திகை 4
திங்கட்கிழமை (20.11.2023)
நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.17 வரை பின்னர் சதயம்
திதி : அஷ்டமி காலை 3.33 வரை பின்னர் நவமி
யோகம் : சித்த யோகம்
கரணம் : பத்திரை மாலை 03:50 வரை பின்பு பவம்
நாமயோகம்: துருவம்
நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 4.45 – 5.45
திங்கட்கிழமை
சுபஹோரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த
இன்று: அஷ்டமி
கரிநாள்: சுபகாரியங்கள் தவிற்காகவும்
நல்ல நேரம்
06:15 – 07:15 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்
09:15 – 10:15 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்
07.30 – 09.00
எமகண்டம்
10.30 – 12.00
குளிகை
01.30 – 03.00
சூலம்:கிழக்கு
பரிகாரம்-தயிர்
சந்திராஷ்டமம்
புனர்பூசம்+பூசம்
நாள்:மேல் நோக்கு நாள்
லக்னம்:விருச்சிக லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 43
ரிய உதயம் : 06:15 காலை
சூரிய அஸ்தமனம் : 06:14.மாலை
Read More… RELIGION
இராசிபலன்கள் : (20-11-2023)
மேஷம்
மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
ரிஷபம்
நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெரும். புது சொந்தங்களின் வருகை இருக்கும். தொல்லை கொடுத்தவர் உதவுவர். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
மிதுனம்
குடும்ப நபர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பர். உறவினர்கள் பகைமை பாராட்டுவர். எதிர்த்து நின்றவர்கள் கூட விலகி நிற்பர். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.மாலை 04:17 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.
கடகம்
மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
மாலை 04:17 மணிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம்.
சிம்மம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண வரவிலிருந்த தடை நீங்கும். பல நல்ல மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கன்னி
குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை தலை தூக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்
குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் இருக்கும். பயணங்களால் அலைச்சல் கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தியானத்தால் மனம் நிம்மதி அடையும். முக்கிய தேவைகள் நிறைவேறும். புது தொழில் தொடங்கும் யோகம் அமையும்.
தனுசு
விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். மனம் தெளிவு பெரும். கணவன் மனைவிக்குள், நெருக்கம் உண்டாகும். தொழிலில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.
மகரம்
பேச்சு திறன் கூடும். புதுமையான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை இருக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
கும்பம்
பிரபலங்கள் அறிமுகமாவர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும்
அவரச முடிவுகள் தவிற்க்கவும்.
மீனம்
குடும்ப வரவு, செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் நலம் பலம் பெரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்