அமீரகத்தில் வேலை, தொழில் இல்லான்னாலும் வெளிநாட்டவர்கள் இருக்கலாம்… அசத்தலான 3 விசாக்கள் (Amazing 3 visas in UAE)
Amazing 3 visas in UAE
அமீரகத்தில் வேலை, தொழில் இல்லான்னாலும் வெளிநாட்டவர்கள் இருக்கலாம்… அசத்தலான 3 விசாக்கள்! (Foreigners can work in the UAE even if they don’t have a business… Amazing 3 visas!)
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை, தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இதேபோல் சுற்றுலாவுக்காகவும் ஏராளமான மக்கள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
48 மணி நேர விசா, 96 மணி நேர விசா, ஷார்ட் டெர்ம் சிங்கிள் என்ட்ரி விசா, ஷார்ட் டெர்ம் சிங்கிள் என்ட்ரி சுற்றுலா விசா, 90 நாள் விசா, மல்டி என்ட்ரி ஷார்ட் டெர்ம் விசா, மல்டி என்ட்ரி லாங் டெர்ம் விசா உள்ளிட்ட ஏராளமான விசாக்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கி வருகின்றது.
ஒவ்வொரு விசாவுக்கும் ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் எமிரேட்ஸில் வேலை மற்றும் தொழில் இல்லாத வெளிநாட்டவர்கள் எமிரேட்ஸில் தங்குவதற்குப் பயன்பெறக்கூடிய மூன்று வகையான சுய நிதியுதவி குடியிருப்பு விசாக்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கி வருகிறது. அவை, ரிமோட் ஒர்க் விசா, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் விசா, யூஏஇ ஓய்வு விசா ஆகிய விசாக்கள் வழங்கப்படுகின்றன.
ரிமோட் வொர்க் விசா டிஜிட்டல் நாடோடி விசா என்று கூறப்படுகிறது. இந்த விசாவின் மூலம் வெளிநாட்டவர்கள் எமிரேட்ஸில் தங்கி தொலைதூரத்தில் வேலை செய்யலாம். இந்த விசா ஓராண்டுக்கு செல்லும். மேலும் இந்த ரிமோட் வொர்க் விசாவை பயன்படுத்தும் தொலைதூர பணியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்யவும் முடியும்.
Read Also : வணிகச் செய்திகள்
ஷாக்.. அமெரிக்காவில் விழுந்தடித்து அரிசி வாங்கும் இந்தியர்கள்! எந்த அரிசி வகை ஏற்றுமதிக்கு தடை?
வாஷிங்டன்: அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு திடீரென தடை விதித்து இருப்பதால் வெளிநாடுகளில் இந்திய அரசிகள் விலை உயரும் என்று அஞ்சி, அமெரிக்காவில் இந்தியர்கள் மூட்டை மூட்டையாக அரிசிகளை வாங்கி குவித்தனர்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதேபோல் மற்ற உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. எல் நினோ பருவ கால மாற்றத்தின் காரணமாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது.